Viduthalai part-1 song lyrics in tamil|விடுதலை பாகம்-01 பாடல் வரிகள்
விடுதலை பாகம் 1 (மொழிபெயர்ப்பு. லிபரேஷன் பாகம் 1) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழிக் காலக் குற்றவியல் திரில்லர் திரைப்படமாகும், இது வெற்றிமாறன் எழுதி இயக்கியது மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பதாகைகளின் கீழ் எல்ரெட் குமாரால் தயாரிக்கப்பட்டது.இது பி.ஜெயமோகன் எழுதிய "துணைவன்" (மொழிபெயர்ப்பு. தோழன்) சிறுகதையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.இத்திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.இதை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் வழங்கியது.
Table of contents
Kaattumalli song lyrics|viduthalai part-1|காட்டுமல்லி பாடல் வரிகள்|விடுதலை பாகம் 1
விடுதலை படத்திலிடம்பெற்ற இந்த பாடலை இளையராஜா மற்றும் அனன்யா பட் பாட,பாடல் வரிகள் மற்றும் பாடலுக்கான இசை இளையராஜா.
Lyrics
ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி…..
பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது
பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி…..
ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல.வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க
பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை
ஆண் : காடே மண்க்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல
பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல
பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும். வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள..வருமா? வருமா? வீட்டுக்குள்ள
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா.என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவர் : வழி நெடுக காட்டுமல்லி
Arutperunjodhi song lyrics|viduthalai part-1|அருட்பெருஞ்ஜோதி பாடல் வரிகள்|விடுதலை பாகம் 1
விடுதலை படத்திலிடம்பெற்ற இந்த பாடலை இளையராஜா இசையமைத்து பாட, பாடல் வரிகள் வள்ளலார் மற்றும் தங்கம்.
Lyrics
ஆண் : போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
ஆண் : போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
ஆண் : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆண் : சாதியும் மதமும் சமயமும் பொய்யனெ
ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ் சோதி
ஆண் மற்றும் குழு : சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி
ஆண் : எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
ஆண் : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
ஆண் மற்றும் குழு : அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
ஆண் : ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி
ஆண் மற்றும் குழு : ஆதியென்றருளிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் மற்றும் குழு : பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் மற்றும் குழு : சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
ஆண் : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆண் மற்றும் குழு : அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆண் : போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
Onnoda nadandhaa song lyrics|viduthalai part-1|ஒன்னோட நடந்தா பாடல் வரிகள்|விடுதலை பாகம் 1
விடுதலை படத்திலிடம்பெற்ற இந்த பாடலை தனுஷ் மற்றும் அனன்யாபட் பாட பாடலுக்கான இசை இளையராஜா.பாடல் வரிகள் சுகா.
Lyrics
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண் : நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது
ஆண் : முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே
ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே
ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது
ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
Viduthalai part-1 song lyrics in tamil:இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்