Pages

Sunday, 18 June 2023

Ayan movie song lyrics in tamil|அயன் திரைப்பட பாடல் வரிகள்

Ayan movie song lyrics in tamil|அயன் பட பாடல் வரிகள்

Table of contents 

 Nenje nenje song lyrics in tamil|Ayan|நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்|அயன்

Nenje nenje song lyrics in tamil
Nenje nenje song lyrics in tamil 


Nenje nenje song lyrics in tamil|Ayan:சூர்யா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த அயன் படத்தில் இடம்பெற்ற நெஞ்சே நெஞ்சே பாடலை ஹரிஸ் ராகவேந்த்ரா மற்றும் மகதி  பாட பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

தமிழ் பாடல் வரிகள்

ஹ ஹ ஹ

ஹூம் ஹூம்

ஹ ஹ

ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே

தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்

வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வந்தாய்.

என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்

ஏன் சேர்கிறாய்.


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்

வானும் என் ம‌ண்ணும்

பொய்யாக‌ க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்

ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்

பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்

உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே

தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே


க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்

க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே

காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்

ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே

என் உச்ச‌த் தார‌கையே

க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்

ந‌ம் காத‌ல் மாறாதே


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே

தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்

வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையை

ஏன் வைகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம் 




Nenje nenje song lyrics in tamil|Ayan:இந்த பாடலை தவிர இந்தப்படத்தில் இடம்பெற்ற மற்றய பாடலை வாசிக்க scroll செய்யுங்கள்.


Oyaayiye Yaayiye song lyrics in tamil|Ayan|ஓ ஆயியே ஆயியே பாடல் வரிகள்|அயன்

Oyaayiye yaayuye song lyrics in tamil
Oyaayiye yaayuye song lyrics in tamil 


Oyaayiye yaayuye song lyrics in tamil|Ayan:சூர்யா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த அயன் படத்தில் இடம்பெற்ற ஓ ஆயியே ஆயியே பாடலை Benny Dayal, Chinmayi, Haricharan, Pa. Vijay பாட பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.


ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி

தூவும் பூ மழை நெஞ்சிலே

ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து

மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து

கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து என் மீது மிதந்து

சாலையில் நடக்கிற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா

தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா


பெண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி

தூவும் பூ மழை நெஞ்சிலே

ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து

மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து

கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து என் மீது மிதந்து

மாலையில் நடக்கின்ற நினைவும் நீ


(இசை...)


ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்

மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்

சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே

பெண்: ஒரு கையில் ஒரு கையில்

மறு கையில் மறு கையில் சுகங்களும்

எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே


ஆண்: இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே

இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்


ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி

தூவும் பூ மழை நெஞ்சிலே

ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து

மையல் கொண்டது என்னிலே


பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து

கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ

என் கையில் வளைந்து என் மீது மிதந்து

மாலையில் நடக்கின்ற நினைவும் நீ


(இசை...)


பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்

எனக்காக எனக்காக வேண்டினேன்

உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே


ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்

இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்

அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே


பெண்: சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே

இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய் (ஓ... ஆயியே...)




Oyaayiye yaayuye song lyrics in tamil:இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே scroll செய்யுங்கள்.


Pala palakura song lyrics in tamil|Ayan|பள பளக்குற பாடல் வரிகள்|அயன்

Pala palakura song lyrics in tamil
Pala palakura song lyrics in tamil 

Pala palakura song lyrics in tamil|Ayan:சூர்யா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த அயன் படத்தில் இடம்பெற்ற ஓ ஆயியே ஆயியே பாடலை ஹரிஹரன் பாட பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.பாடல் வரிகள் பா.முத்துக்குமார்.


ஆண்: பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ

அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ

மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா

தினம் புதுமையடா அதை அனுபவிடா

காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா (பளபளக்குற பகலா நீ...)


(இசை...)


ஆண்: எட்டித்தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்

அதிசயம் என்னவென்றால்

அதன் இருபக்கம் கூரிருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால்

தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி

பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ (பளபளக்குற பகலா நீ...)


(இசை...)


ஆண்: இதுவரை நெஞ்சிலிருக்கும்

சில துன்பங்களை நாம் மறப்போம்

கடிகார முள் தொலைத்து

தொடுவானம்வரை போய் வருவோம்

அடைமழை வாசல் வந்தால்

கையில் குடையின்றி வா நனைவோம்

அடையாளம் தான் துறப்போம்

எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம்

நாம் என்ன கொண்டு போவோம்

அட இந்த நொடி போதும்

வா வேற என்ன வேண்டும் வேண்டும் (பளபளக்குற பகலா நீ...)




Pala palakura song lyrics in tamil:இந்த படத்தல் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே scroll பண்ணவும்.


Vizhi moodi yosithal song lyrics in tamil|Ayan|விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்|அயன்

Vizhi moodi yosithal song lyrics in tamil
Vizhi moodi yosithal song lyrics in tamil 


Vizhi moodi yosithal song lyrics in tamil|Ayan:சூர்யா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த அயன் படத்தில் இடம்பெற்ற விழி மூடி யோசித்தால் பாடலை கார்த்திக் பாட பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.பாடல் வரிகள் நா.முத்துக்குமார்.


விழி மூடி யோசித்தால் அங்கேயும்

வந்தாய் முன்னே முன்னே..

தனியாக பேசிடும் சந்தோசம்

தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இதுபோல் மழை காலம்

என் வாழ்வில் வருமா?

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே நான்

என்னை கண்டேனே செந்தேனே...

(விழி மூடி..)


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்

துளியாய் துளியாய் குறையும் மௌனம்

பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானாய் எந்தன் கால்கள் இரண்டும்

உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால்

நம் தேகம் மிதந்திடுமே.

விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.

(விழி மூடி..)


ஆசை என்னும் தூண்டில் முள்தான்

மீனாய் நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்டபின் மறுபடி

மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டு

தனியாய் சுற்றி பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில்

எதோ புது மயக்கம்

இது மாயவலையல்லவா

புது மோகநிலையல்லவா

உடை மாறும் நடை மாறும்

ஒரு பாரம் என்னை பிடிக்கும்

(விழி மூடி) 




Vizhi moodi yosithal song lyrics in tamil:இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே Scholl செய்யுங்கள்.


Honey honey song lyrics in tamil|Ayan|ஹனி ஹனி பாடல் வரிகள்|அயன்

Honey honey song lyrics in tamil
Honey honey song lyrics in tamil 


Honey honey song lyrics in tamil|Ayan:சூர்யா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த அயன் படத்தில் இடம்பெற்ற ஹனி ஹனி பாடலை Devan Ekambaram and Sayanora Philip
பாட பாடலுக்கான இசை ஹாரிஸ் ஜெயராஜ்.பாடல் வரிகள் பா.விஜய்

பெண்: ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி

ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி

ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி

ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி


பெண்: கன்னி இவள் கணினி

ஆண்: அடடா


பெண்: கள் அவிழும் பதனி

ஆண்: அது தான்


பெண்: கண்ட இடம் தொடு நீ

இது காதல் கொண்ட மேனி


பெண்: கொஞ்சம் இதை கவனி

ஆண்: அடடா


பெண்: கொஞ்சுவதில் வதனி

ஆண்: அது தான்


பெண்: அஞ்சுமுடல் அவனி

உன் ஆசை சொல்ல வா நீ


பெண்: குத்து மதிப்பாக.. முத்துப் பதிப்பாக..

மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக

கொஞ்சம் இனிப்பாக.. கொஞ்சம் புளிப்பாக..

முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக (ஹேய் ஹனி ஹனி...)


(இசை...)


ஆண்: யே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி கிவ் மி ஆல் யுவர் லவ்

அன்ட் ஐ வில் கிவ் யு ஆல் மை மனி

யே யூ ஆர் மை கட் லிட்டில் டார்லிங்

ஐ வண்ண லவ் யூ லவ் ஆல் நைட் லாங் இன்

ஆ வண்ண ஷேக் தட் பாடி கம் ஆன் கேர்ல்

ஐ வண்ண ஷேக் யுவர் பாடி யு அன்ட் மி

ஆல் நைட் லாங் ஆல் நைட் லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங்

பெண்: அழகானது லிப்ஸோட லிப்ஸி... இரவானது எப்பவும் செக்ஸி...

சூடானது பெண் எனும் பெப்ஸி... சுகமானதே சுவாசி...


ஆண்: ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..


பெண்: ஆ... மிஸ்ஸானது நெஞ்சுல நெஞ்சு... பிக்ஸானது தீயில பஞ்சு...

கிக்ஸ்ஸானது என்னென்ன செஞ்ச... லிப்ஸானது கொஞ்சு...


பெண்: ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி

வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு

ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு (ஹேய் ஹனி ஹனி...)


(இசை...)


பெண்: ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு...

புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...


ஆண்: நீ கண்ணை அசைக்க.. நான் உன்னை இசைக்க..

பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி... மியூட்டாகவே என்னோட ஊசி...

லைட்டாகவே என்னையும் வாசி... நைட்டானது ராசி...


பெண்: ஆலிவ் எண்ணைய் காலு ஆப்பிள் கலர் தோலு

ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு

ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு

மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு (ஹேய் ஹனி ஹனி...)




Honey honey song lyrics in tamil:இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை மேலே காணலாம்.