![]() |
Vivek Velmurugan |
விவேக் வேல்முருகன் என்ற பெயரால் அறியப்படும் விவேக் தமிழ் மொழித் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய பாடலாசிரியர் ஆவார். எனக்குள் ஒருவன் (2015) படத்தில் அறிமுகமான பிறகு, 36 வயதினிலே (2015), ஜில் ஜங் ஜக் (2016), மெர்சல் (2017), சர்க்கார் (2018), பேட்டா (2019), பிகில் (2019) மற்றும் ஜகமே தந்திரம் (2021)ஆகிய படங்களில் அவரது பணிக்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.அவரது "ஆளப்போறான் தமிழன்", "மரண மாஸ்", "வெறித்தனம்", "டும் டும்" மற்றும் "ரஞ்சிதமே" ஆகிய பாடல்கள் Youtube இல் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றதோடு மேலும் பல சாதனைகளை நிகழ்த்த முனைப்புடன் உள்ளது.விவேக் இதுவரை 175 மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.