Pages

Tuesday, 1 August 2023

Rudhran song lyrics|ருத்ரன் பாடல் வரிகள்

Rudhran song lyrics|ருத்ரன் பாடல் வரிகள்

Rudhran song lyrics
Rudhran song lyrics


Rudhran song lyrics:ருத்ரன் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். திருமாறன், எஸ். கதிரேசன் தயாரித்து இயக்கினார்.இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஆர். சரத்குமார், பிரியா பவானி ஷங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் குமார், தரண் குமார் மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இசையமைத்துள்ளனர்.


Table of contents 

Paadatha pattellam song lyrics|rudhran|பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள்|ருத்ரன்

ருத்ரன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை
 சத்ய பிரகாஷ் , நித்யஸ்ரீ வெங்கட்ராமன் மற்றும் எம்சி டி ஆகியோர் பாட பாடலுக்கான இசை தரண் குமார்.பாடல் வரிகள் கண்ணதாசன்.

Lyrics 

ஆண் : மைமா கேரா ஆக்கிட்டா
டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே
இவ இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஆண் : ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்

ஆண் : உந்தன் அழகை கண்டிட
ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்

ஆண் : பாடாத பாடாத
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் : ஹ்ம்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

ஆண் : அதிசயம் என்னில் நிகழந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது

ஆண் : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்

ஆண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

ஆண் : பாடாத பாடாத
பெண் : ஆஆ.. ஆஆ…
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா

பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா

ஆண் : ………………

பெண் : ……………..
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா

பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
இருவர் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்


Jorthaale Song Lyrics|rudhran|ஜோர்தாலே பாடல் வரிகள்|ருத்ரன் 

ருத்ரன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை
 அசல் கோலார் , ஒப்ரோ மற்றும் மேக் விக்கி பாட பாடலுக்கான இசை ஒப்ரஓ.பாடல் வரிகள் அசல் கோலார்.

 Lyrics 


ஆண் : ஆ வா மாமே
வந்து பிரட்டி அமுக்கி
தூக்கு அமுக்கி மாமே

ஆண் : கீழ குத்து மேல தூக்கு

ஆண் : அந்த மாறி
ஆண் : எந்த மாறி

ஆண் : இப்ப வேற மாறி

ஆண் : ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு
ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு
ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு
திமுக்கு திமுக்கு திமுக்கு
திமுக்கு திமுக்கு டுர்ரா
டிர்ரான்ட்டு டிர்ரான்ட்டு டிர்ரான்ட்டு
டிர்ராண்ட்டு டிர்ராண்ட்டு போடு

ஆண் : போடு

ஆண் : ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு
ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு
ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு
லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி
ஆடனும்டா டான்ஸ்சு
ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு
பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு
வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு
குண்டாவுனும் பர்ஸ்ட்டு

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஆ…
ஆ ஆ அ…
ஆ ஆ அய்
அய் அய் ஒ ஒ..

ஆண் : ஏய் வா தம்பி
ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு
வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ்
கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ்
ஹாட் ப்ராமிஸ்

ஆண் : முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல ஒட்டிக்கும்
அதுபோள ப்ரெண்ட்ஸ் கூட ஒத்துப்போ
அந்த பிகருங்க தான
துட்டுகோசம் உட்டு போவும்
எவ்ளோ காசு
வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ்
பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ்
சென்னையோட ஃபேஸ்
நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ்
வேணாம் அட்வைஸ்

ஆண் : ஏன்னா இது வாலிப வயஸ்
போனா வராதுடா சாய்ஸ்
யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ்

ஆண் : ஒர்த்தன் ஓடு இல்லாத
வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல
பின்வாசல் தொறந்து மூட்ற
ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட
புல்டோசர் போல ஆல
போட தேடுர காஜி மாம்ச
கூப்டுது சாய்ங்காலம் மேல
கோய்ந்தம்மா வீடியோ கால்ஸ் ல

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : …………….

ஆண் : நீ நிறுத்தினாலும் ஆடும்
ருத்ரனோட காலு
நீ நம்பி நீட்டுன காலையே
வாசிப்பான் கிட்டார்

ஆண் : அவனுங்க பாத்ததையே
காமுச்சு காமுச்சு
ஆக்குறானுங்க போர்

ஆண் : நாம எல்லாம்
எல்லாருக்கும் புடிச்ச மாதிரி
கதாபாத்திரம் ரோலு

ஆண் : நீ குரலு குடுத்து பாரு
சும்மா கிளம்பி வரும் ஊரு
நான் அன்ப அள்ளி கொடுக்குறதுல
ஆடி ஆஃபர் சேலு

ஆண் : நீ பழக பழக பழக
நல்லவன்டா ஆளு
டென்ஷன் ஆவ ஆவ ஆவ
உரிம் உனக்கு தோலு

ஆண் : ஏ உதவி கேட்டு வர்றவனுக்கு
கொடுக்கணும் டா சோல்டரு
நீ சத்தியம் செஞ்சு
கதைய மாத்துனா
உனக்கு தாண்டா ஏழ்ர

ஆண் : நீ சரிக்கிடாம மேல ஏறு
பணிவு தாண்டா லேடரு
அட குழந்தைகள நோன்டுறவன
பண்ருவண்டா மர்டரு

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால

ஆண் : ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே
தொர்ட்டா தூக்கினு தொரத்தாத
கரத்தா கத்துனு மெரட்டாத
அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால


Pagai mudi song lyrics|rudhran|பகை முடி பாடல் வரிகள்|ருத்ரன் 

ருத்ரன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை 
திவாகர் பாட பாடலுக்கான இசை தரேன் குமார்.பாடலாசிரியர் கருணாகரன்

Lyrics 

ஆண் : உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா
உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா

ஆண் : எதற்கும் துணிந்து எழுந்து நிற்பேன்
எல்லை கடந்து கோபம் வெடிக்க
அட்டி இரண்டும் கண் திறக்க
அதர்மம் தழைக்க சிதறி பறக்கவே

ஆண் : ருத்ரன்

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் காதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : குமுறுதே குமுறுதே
நெஞ்சம் குமுறுதே
பகை எனை முடித்திட
உயிரும் உறுமுதே

ஆண் : உறுமுதே உறுமுதே
சினமும் உறுமுதே
சதையினை தாண்டியே
உதிரம் கொதிக்குதே

ஆண் : தூஸ்ய்ய கோலம்
மகாகால நேரம்
வச்சு ஹஸ்த போகம்
ருத்திராயா வேகம்

ஆண் : அகோரி தந்த ரூபம்
சதா சிவாய யாகம்
பூதேஸ்வராய லோகம்
திரு நீல கண்ட தேகம்

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் காதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : ரரார… ரரார… ரரார…
ருத்ரன்

ஆண் : பகை என்னும் சொல்லை
ரத்தம் கொண்டு அழித்திடு
சதை தின்ன பழகி
யுத்தம் தன்னை முடித்திடு

ஆண் : நேசம் கொண்ட உறவை
…கொண்டு உருவிடு
தாய் தந்த பாலுக்கு
பாலூற்றிய வலி இது

ஆண் : இழப்பதற்கு ஒன்றும் இல்லை
…எரியுது
அழிக்க அழிக்க வந்தால்
நெற்றி கண்ணை திறந்திடு

ஆண் : கூலவாட சயனம்
காலாட்ச வதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்

ஆண் : சாதா தாரி பயணம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் காதை முடி
ஆதி அடி சிவனடி
பகை மிரளும் உன் அடி

ஆண் : ரரார… ரரார… ரரார…
ருத்ரன்

ஆண் : சினம் கொண்ட நெஞ்சம்
சீற்றம் கொண்டு அலையுதே
தொண்டை குழியில் நிற்கும்
சிவன் உண்ட விஷம் இது

ஆண் : பாவ கணக்கை பார்த்தே
விதி நிறுத்தும் நொடி அது
பிளக்க பிளக்க சரிதம்
ருத்ர ஆட்டம் நடக்குதே

ஆண் : அண்டம் அண்டம் எரிய
சண்டம் சண்டம் கூடுதே
வெடிக்க வெடிக்கம் சினம்தான்
ருத்ரனே நீ புறப்படு

ஆண் : கூலவாட சயனம்
காலாட்ச வதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்

ஆண் : சாதா தாரி பயணம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்

ஆண் : {நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய}….(3)


Enna petha ammave song lyrics|rudhran|என்ன பெத்த அம்மாவே பாடல் வரிகள்|ருத்ரன் 

ருத்ரன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை 
ஜீ வி பிரகாஷ் குமார் இசையைத்து பாட பாடல் வரிகள் மதுரகவி.

Lyrics 

ஆண் : என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே

ஆண் : என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே

ஆண் : பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே

ஆண் : தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே

ஆண் : உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே

ஆண் : கருவில் தாங்கி
கனவில் ஏங்கி
கதறி ஈன்ற
தியாக உருவமே

ஆண் : சில நொடி பிடிச்சி
பிஞ்சு மனம் பொதச்சி
உன் நிழலில் நடிக்க
மறு ஜென்மம் தோன்றுமா

ஆண் : ஊராரு மெச்ச உன்ன
நான் அழ வைக்க தான
ஏழேழு கடலும்
தாண்டி வந்தேன்

ஆண் : மூச்சோடு மல்லுகட்டி
என்ன பெத்தவளே
முந்தான கூண்டில் வச்சி
பாதுகாத்தவளே

ஆண் : தானக துடிச்ச நெஞ்சு
என்ன நினச்சுதோ
கைமாறு என்ன செஞ்சு
பாவம் தீர்க்கவே

ஆண் : என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே

ஆண் : தகப்பன் தோள்கள்
தாங்கிட இல்லைேய
தாயின் மடியும்
தூங்க இல்லையம்மா

ஆண் : தன்னந்தனி மரமா
நிக்க வச்ச நீயே
தாய் இழந்த மகனா
பாட வச்சிட்டியே

ஆண் : தாயே உன் கதகதப்பில்
பனிக்குட வெது வெதுப்பில்
நான் வாழ பிறவி வாய்க்குமா

ஆண் : ஊர் கூடி தேர் இழுத்தும்
தெய்வம் காணவில்ல
முக்கோடி சில இருந்தும்
தாய மிஞ்சவில்லை

ஆண் : பேராடி சொத்து சேர்த்தும்
இன்பம் சேரவில்லை
தாயே நீ இல்லாமத்தான்
மோட்சம் இல்லை

ஆண் : என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே

ஆண் : என்ன பெத்த அம்மாவே
என்ன பெத்த அம்மாவே
என்ன விட்டு எங்க போன
ஏங்க வச்ச அம்மாவே

ஆண் : பெத்து என்ன வளத்தவதான்
இத்துப்போயே கிடக்கிறியே
பேச்சும் மூச்சும்
ஓய்ஞ்சு கிடக்கியே

ஆண் : தாலாட்டும் தொட்டில் சேல
சாயம் விட்டு போகவில்லை
தாலாட்டு பாடுனவ
சாயம் விட்டு போயிட்டியே

ஆண் : உன் சேல கட்டி நின்னு
வழி அனுப்பி வச்சவளே
பட்டு சேல வாங்கி வந்தேன்
விழி மயங்கி கிடக்கியே


Unnodu Vaazhum Song Lyrics|rudhran|உன்னோடு வாழும் பாடல் வரிகள்|ருத்ரன் 

ருத்ரன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை
சித் ஸ்ரீராம் பாட பாடலுக்கான இசை தரன் குமார்.பாடல் வரிகள் கபிலன்.

Lyrics 

ஆண் : உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே

ஆண் : நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி
வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே

ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்

ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் எந்தன் காதல் பெண்ணே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த
மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே

ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே

பெண் : முனகல் ……………….

ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீட்டோடு நீ விளையாட நான்

ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் காணும் உனதே

ஆண் : உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே

ஆண் : நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சாெந்தம்
நீதானே…
உன்னாலே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே


Rudhran song lyrics:இந்த ஒரே பக்கத்தில் நீங்கள் இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் பார்வையிட்ட அனுபவம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்று எங்களுக்கு அறியத் தாருங்கள்.