Vaseegara movie song lyrics in tamil|வசீகரா பட பாடல் வரிகள்
Oru thadavai song lyrics in tamil|vaseegara|ஒரு தடவை பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Oru thadavai song lyrics in tamil |
பாடல் வரிகள்
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்.
ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை
போல மறைத்து வைத்தால்
தொிந்து விடும் காதலில் தான்
பூக்கள் மோதி மலைகள் கூட
உடைந்து விடும் உன்னை
ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே.
Vena Vena vilunthiduvena song lyrics in tamil|vaseegara|வேணா வேணா விழுந்திடுவேணா பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Vena Vena vilunthiduvena song lyrics in tamil |
விஜய் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த வசீகரா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை உதித் நாராயணன் மற்றும் சாதனா சர்க்கம் பாட பாடலுக்கான இசை எஸ் ஏ ராஜ்குமார்.பாடல் வரிகள் பா.விஜய்.
பாடல் வரிகள்
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது
மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்
ஓரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்
ஒஹோ வசீகரா வசீகரா
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்
இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ
ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்
ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
எனக்குள் உன்னை தொலைத்து
நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால்
அதை காதல் என்று கூறு
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்.
Vaseegara movie song lyrics in tamil:இந்த படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே scroll செய்யுங்கள்.
Nenjam oru Murali song lyrics in tamil|vaseegara|நெஞ்சம் ஒரு முறை பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Nenjam oru Murali song lyrics in tamil |
பாடல் வரிகள்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானா எந்தன் நெஞ்சில் முதல் சரணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை
நீதான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பறவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தற்பவெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .
Poopola theepola song lyrics in tamil|vaseegara|பூ போல தீ போல பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Poopola theepola song lyrics in tamil |
Vaseegara movie song lyrics in tamil:விஜய் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த வசீகரா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஹரி ஹரன் பாட பாடலுக்கான இசை எஸ் ஏ ராஜ்குமார்.பாடல் வரிகள் பா.விஜய். |
பாடல் வரிகள்
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரியசகி சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிரித்து சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
Vaseegara movie song lyrics in tamil:இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள் .
Aaha enparkal song lyrics in tamil|vaseegara|ஆஹா என்பார்கள் பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Aaha enparkal song lyrics in tamil |
Vaseegara movie song lyrics in tamil:விஜய் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த வசீகரா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை சங்கர் மகாதேவன் பாட பாடலுக்கான இசை எஸ் ஏ ராஜ்குமார்.பாடல் வரிகள் பா.விஜய்.
பாடல் வரிகள்
பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ
சூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே
பார்வைக்கு பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே
ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது
ஹேய் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே ஹே ஹே போர்க்கபால் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான்
மின் காந்தம் போல ஒரு முகம்
பூசி பூ போல ஒரு இடை
தங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
இந்த படத்திலுள்ள மற்றய பாடல்களின் வரிகளை வாசிக்க கீழே ஸ்க்ரோல் செய்யுங்கள்.
Marriage endral song lyrics in tamil|vaseegara|மேரேஜ் என்றால் பாடல் வரிகள்|வசீகரா
![]() |
Marriage endral song lyrics tamil |
Vaseegara movie song lyrics in tamil:விஜய் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த வசீகரா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை கார்த்திக் பாட பாடலுக்கான இசை எஸ் ஏ ராஜ்குமார்.பாடல் வரிகள் பா.விஜய்.
பாடல் வரிகள்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு
விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீரியல் பல்பா மாத்தி போடு
ஆகாயம் பாத்து சூரியன் கேட்டு ஆரத்தி தட்டா எடு
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு
உள்ள சொந்தமெல்லாம் சேர்ந்து வந்து திருமனத்த நடத்துரப்போ
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா